வாடகை வாகனங்களை அரசே இயக்க ஆலோசனை – அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழகத்தில் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச் சாலையில் இருக்கக்கூடிய அமைச்சரின் இல்லத்தில் பார்வையற்ற மாற்றுத்…

தமிழகத்தில் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் இருக்கக்கூடிய அமைச்சரின் இல்லத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக 25 மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட்சை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக DOT எனும் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் மாணவர்கள் எளிதில் எழுத்துக்களை அறிந்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

தகவல் தொழில்நுட்பவியல் துறையில் State family database திட்டம் தீவிரமாக
செயல்படுத்தப்பட்டு வருகிறுத. சமூகத்திற்குப் பயனுள்ள மாற்றங்களை
உருவாக்க இந்த திட்டம் பயன்பெறும். இ-சேவை 2.0 திட்டத்தை மேம்படுத்தப்பட்ட திட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக 76 திட்டங்களை இணைக்க வேலைகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது. கேரளாவைப் போன்று தமிழகத்திலும் ஓலா, ஊபர் மாதிரியான வாடகை வாகனங்களை அரசே
இயக்குவதற்கான சாத்தியகூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளது. மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டமாக இது இருந்தால் இந்த திட்டம் நிச்சயம்
செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

முதலமைச்சர் மேற்கொண்டு வரும் சீரிய முயற்சியின் காரணமாக பல்வேறு
தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றன. அதன் மூலம்
வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதுவே 1 ட்ரில்லியன் டாலர்
பொருளாதாரத்தை அடைய முதற்படி என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.