முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் பெய்துகொண்டிருக்கும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதற்கிடையே, சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரே நாளில் 20.செ.மீ அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்டமண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறும்போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும். சில நேரங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங் களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றார்.

Advertisement:
SHARE

Related posts

தேசிய கொடிகளுடன் கடலில் அணிவகுத்த கட்டுமர படகுகள்; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

Ezhilarasan

மேகதாது விவகாரத்தில் தமிழர் நலனை காக்கவே போராட்டம்: வி.பி.துரைசாமி

Gayathri Venkatesan

மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!