இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் பல மாதங்களாக கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சவும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சவும் நேற்று ராஜினமா செய்தார்.
கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில், மகிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் இலங்கையில் உள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் நாட்டை விட்டு வெளியேற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் தலைவர்கள் இருவர் உட்பட மூன்று அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்து உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வரும் 28ம் தேதி வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.









