என்.ஐ.ஆர்.எப். தரவரிசை; அண்ணா பல்கலைக்கழகம் பின்னடைவு

என்.ஐ.ஆர்.எப். தரவரிசை  பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தேசிய அளவிலான பல்கலை கழகங்களில் தரப்பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டுக்கான  என்.ஐ.ஆர்.எப்…

என்.ஐ.ஆர்.எப். தரவரிசை  பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தேசிய அளவிலான பல்கலை கழகங்களில் தரப்பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டுக்கான  என்.ஐ.ஆர்.எப் பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசையில் கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வந்த அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டு மொத்த தரவரிசையில் 3 இடங்களில் சற்று முன்னேற்றம் கண்டிருக்கிறது. இதேபோல் ஆராய்ச்சி பிரிவிலும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு 32-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 21-வது இடத்தை பிடித்துள்ளது. ஒட்டு மொத்த தரவரிசை, ஆராய்ச்சி பிரிவு வரிசையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், பல்கலைக்கழக பட்டியலில் தொடர்ந்து பின்னடைவையே அண்ணா பல்கலைக்கழகம் சந்தித்து வருகிறது.


கடந்த 2018-ம் ஆண்டில் பல்கலைக்கழக பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த அண்ணா
பல்கலைக்கழகம், அடுத்து வந்த ஆண்டுகளில் முறையே 7, 14, 18 என்று பின்னோக்கி
சென்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் வரிசையில் 4 இடங்கள் சரிந்து, 20-வது
இடத்தில் இருக்கிறது.

மேலும் என்ஜினீயரிங் தரவரிசையில், கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு பின்னடைவில்
இருந்த அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு கொஞ்சம் முன்னேறி இருக்கிறது. கடந்த
ஆண்டில் 18-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 17-வது இடத்துக்கு
வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.