முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி


நடிகை அளித்த பாலியல் புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, நெருக்கமாக பழகி ஏமாற்றியதாக, நடிகை சாந்தினி புகார் அளித்தார். மேலும், மணிகண்டன் தமக்கு கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்தனர். முன்னதாக அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட மணிகண்டன், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ஜாமீன் கோரி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து, அவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, மணிகண்டனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் தாக்கல் செய்த மனுவை, சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, போலீஸ்தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.

Advertisement:
SHARE

Related posts

டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!

Nandhakumar

பாராலிம்பிக்; இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்

Saravana Kumar

இளைஞருக்கு அரிவாள் வெட்டு; உறவினர்கள் சாலை மறியல்

Halley karthi