இரண்டு மாதம் பேசாததால் மாணவியை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்

சென்னையில் இரண்டு மாதம் பேசாத ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்த். இவரும் அதே பகுதியயைச் சேர்ந்த இளம்பெண்…

சென்னையில் இரண்டு மாதம் பேசாத ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்த். இவரும் அதே பகுதியயைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் 12ஆம் வகுப்பு முதல் காதலித்து வந்துள்ளனர். இளம் பெண் கல்லூரி மூன்றாம் ஆண்டு தேனாம்பேட்டை எஸ்ஐடி கல்லூரியில் படித்து வருகிறார். ஆனால், பிரசாந்த் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெறாமல் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் இளம் பெண்ணின் பெற்றோர் பிரசாந்தை விட்டு பிரியுமாறு தெரிவித்துள்ளனர். இதனால், அந்தப் பெண் இரண்டு மாதங்களாக பிரசாந்திடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

மாணவி பேசாததால் ஆத்திரத்தில் இருந்த பிரசாந்த் நேற்று முன்தினம் தேனாம்பேட்டையில் உள்ள மகளீர் கல்லூரிக்குச் சென்றுள்ளார். அங்கு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பிரசாந்த் திடீரென இளம்பெண்ணின் கன்னத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இரண்டு மாதம் பேசாத ஆத்திரத்தில் கல்லூரி மாணவியயை முன்னாள் காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.