கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்தார். அதன்பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முன்னரே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : அமெரிக்க நிதித்துறையில் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியல் – 5 இந்திய வம்சாவளிப் பெண்கள் இடம்பிடித்து சாதனை!
இதனைத் தொடர்ந்து, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. பின்னர் மார்ச் 22 ஆம் தேதி அம்மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக தெரிவித்தது. இதனை ஈவிகேஎஸ் இளங்கோவனும் வீடியோ மூலம் உறுதி செய்தார்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாகவும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.







