பொம்மை பந்தை தற்செயலாக விழுங்கிய நாயைக் காப்பாற்றி கால்நடை மருத்துவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல செல்லப்பிராணி பராமரிப்பாளர்கள் தங்கள் வளர்க்கும் நாய், பூனைகளை அவர்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்களைப் போலவே கருதுகின்றனர். காரணம் செல்லப்பிராணிகள் உரிமையாளர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருகின்றன. இதன் காரணமாக அவற்றிற்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கிக்கிடப்பதை நாம் காண முடியும்.
பந்துகளுடன் விளையாடுவது நாய்கள் இன்பத்தையும் உடல் உழைப்பையும் தருவதால், செல்லப்பிராணி பராமரிப்பாளர்கள் வித விதான பந்துகளை நாய்களுக்கு வழங்கி அவற்றுடன் விளையாடி மகிழ்வதை இணையத்தில் அவ்வப்போது நாம் கண்டு ரசித்து வருகிறோம்.
இருப்பினும், விளையாடும் அனைத்து தருணங்களும் மகிழ்ச்சியை மட்டுமே அளிப்பதில்லை. செல்லப்பிராணிகள் சில நேரங்களில் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்வதையும் அவ்வப்போது நாம் காணலாம்.
அந்த வரிசையில், டிவிட்டரில் பகிரப்பட்ட ஒரு வைரலான வீடியோவில், நாய் ஒன்று சிறிய பொம்மைப் பந்தை எடுக்கும்போது தற்செயலாக விழுங்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, ஒரு அன்பான கால்நடை மருத்துவர் தனது புத்திசாலித்தனத்தால் நாயின் உயிரைக் காப்பாற்றுகிறார்.
HERO! 🐶 Dr. Hunt saved this dog that had swallowed a Kong Toy. (🎥:drandyroark)
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) April 3, 2023
அந்த வைரலான வீடியோ அக்கறையுள்ள கால்நடை மருத்துவர் நாயின் தொண்டையிலிருந்து பந்தை அகற்ற முயல்வதைக் காட்டுகிறது. சில பதட்டமான நிமிடங்களுக்குப் பிறகு பொம்மையை வெற்றிகரமாக வெளியே எடுக்கப்படுகிறது. அதன் பிறகு கால்நடை மருத்துவர் தனது இரு கைகளைத் தூக்கி தனது வெற்றியின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.







