முக்கியச் செய்திகள் Health

உடல் எடையைப் பராமரிப்பது இவ்வளவு சுலபமா?

உடல் எடையைக் குறைப்பது ஒரு போராட்டம் தான். ஆனால், அதைப் பராமரிப்பது சுலபம்தான். உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், அதைத் தக்கவைத்துக்கொள்வதும் அவசியமானது. அதற்கு உணவு மாற்றங்களை மேற்கொள்வது முக்கியம். அதன்படி, உடல் எடையைக் குறைக்க, பராமரிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில ஆலோசனைகளைப் பார்க்கலாம்.

1. கார்போஹைட்ரேட்:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உங்கள் உடல் எடையைக் குறைக்க கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைத்துக்கொள்ளலாம். ஆனால், எடை இழப்பைத் தக்கவைக்க அவற்றை வைத்திருப்பதும் முக்கியம் எனப் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா அறிவுறுத்துகிறார். நீங்கள் போதுமான கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடவில்லை என்றால், நீங்கள் எடை இழப்பைத் தக்கவைக்க முடியாது.

2. பழங்கள்:

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆப்பிள், பேரிக்காய் மற்றும் பெர்ரி போன்ற பழங்களைச் சாப்பிடுவது குறைவான எடை அதிகரிப்பைக் கொடுக்கும். இத்தகைய பழங்களில் அதிக அளவு ஃபிளாவனாய்டுகள் இருக்கும்.

3. தினசரி உணவில் நார்ச்சத்து:

புதிய பழங்கள், பச்சை இலைக் காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஒல்லியான புரதம் போன்ற உணவுகள் சிறந்தவை, ஏனெனில் அவை உங்கள் உணவு தேவையை நிறைத்து, ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது அதிகமாகச் சாப்பிட வேண்டிய தேவையை நீக்குகிறது மற்றும் எடை அதிகரிப்பு நிகழ்வுகளைத் தடுக்கிறது.

4. கலோரி:

எடை பராமரிப்பின் ஒரு முக்கிய அம்சம் உங்கள் தினசரி கலோரிகளைக் கண்காணிப்பதாகும். உடல் எடையைக் குறைக்கும்போது நீங்கள் முன்பைவிட அதிக கலோரிகளை நீங்கள் சாப்பிடலாம். ஆனால், உங்கள் தினசரி தேவை அறிந்து அதற்கேற்ப உங்கள் உணவைத் திட்டமிடுவது முக்கியம். இது அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கும். வாராந்திர திட்டத்தை உருவாக்குங்கள்.

5. சர்க்கரை:

இனிப்புப் பொருட்களிலிருந்து உங்கள் கைகளைத் தவிர்ப்பது கடினம். எனவே, தேன் அல்லது வெல்லம் போன்ற சர்க்கரை மாற்றுகளுக்கு மாறுவதாகும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை எடை அதிகரிப்பின் மிகப்பெரிய காரணமாக உள்ளதால் அதனைப் பயன்படுத்தக் கூடாது.

6. காலை உணவைத் தவிர்க்காதீர்கள்:

எடை இழப்பு என்பது நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது மட்டுமல்ல, நாள் முழுவதும் உங்கள் கலோரிகளை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறீர்கள் என்பதையும் பொறுத்தது. காலை உணவு நாள் முழுவதும் பாதையை அமைக்கிறது, எனவே நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்பதை உறுதிசெய்து, தொடக்கத்திலேயே அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுங்கள்.

அண்மைச் செய்தி: ‘ஓய்வூதிய பிரச்சினையில் உடனடி தீர்வு வேண்டும்; அதிகாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ போக்குவரத்து ஊழியர்கள்!’

7. சமையல்:

சிறந்த இதய ஆரோக்கியத்திற்காகக் கடுகு எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களுக்கு மாறுவது நல்லது மற்றும் உங்கள் உணவில் நல்ல தரமான கொழுப்புகளைச் சேர்ப்பது நல்லது. ஆனால், இது உங்கள் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தவும், கிரில்லிங், ப்ராய்லிங் மற்றும் ரோஸ்ட் போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளுக்கு மாறவும் உதவுகிறது. இவை ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்கிறது.

8. பட்டினி கிடக்காதே:

அதிக கலோரி கட்டுப்பாடு உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். மேலும், பசியைக் கட்டுப்படுத்தும் சில ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே, இந்த இரண்டு காரணிகளும் மீண்டும் எடை அதிகரிப்பதற்கு காரணமாகின்றன.

9. உடற்பயிற்சி:

உங்கள் எடையைப் பராமரிப்பதற்கான திறவுகோல் உடலில் ஆற்றல் சமநிலையைப் பராமரிப்பது. எனவே, வழக்கமான உடற்பயிற்சி நீங்கள் தினசரி உட்கொள்ளும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதனால், உங்கள் எடை ஒரே மாதிரியாக இருக்கும்.

10. போதுமான தூக்கம்:

தூக்கமின்மை எடை அதிகரிப்பதற்கான முக்கிய ஆபத்து காரணி. போதிய தூக்கமின்மை உங்கள் பசியை அதிகரிக்கும் “பசி ஹார்மோன்” எனப்படும் கிரெலின் அதிக அளவுகளுக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும் மற்றொரு ஹார்மோனான லெப்டின் அளவையும் அடக்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“வார்னருக்கு எதிரான கேப்டன்ஷிப் தடையை நீக்க ஆலோசனை”

Web Editor

காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மற்றும் மாமியார் கைது!

Jeba Arul Robinson

ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள்!

EZHILARASAN D