வயதானவர்கள் பொன்னின் செல்வன் திரைப்படத்தைக் காணத் திரையரங்குக்கு வருகின்றனர். அவர்களுக்குத் தகுந்த உதவியை திரையரங்கு உரிமையாளர்கள் செய்ய வேண்டும்.
சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, நடிகைகள் த்ரிஷா, நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மற்றும் படக்குழுவினை சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நடிகர் விக்ரம் “ரொம்ப நாள் கனவு இந்த மாரி படங்கள் செய்ய. இந்தியா முழுவதும் நிறைய வரலாற்றுக் கதைகள் இருக்கிறது, அதில் நான் நடிக்க மாட்டேன் நா என்ற கனவுகளும் இருந்தது. எனக்குப் பிடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள அத்தனை
கதாபாத்திரங்களும் மிகச்சிறந்தவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் கதை எழுதிய கல்கி உருவாக்கிய இந்த கதையில் நான் நடிப்பது ரொம்ப பெருமையாக உள்ளது. மூன்று தலைமுறை என இந்த பொன்னியின் செல்வத்தின் படத்தைக் காண ஆவலாக உள்ளது ரொம்ப பெருமையாக உள்ளது. ஒரே ஒரு வேண்டுகோள் வயதானவர்கள் பொன்னின் செல்வன் திரைப்படத்தைக் காணத் திரையரங்குக்கு வருகின்றனர். அவர்களுக்குத் தகுந்த உதவியை திரையரங்கு உரிமையாளர்கள் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
பொன்னியின் செல்வன் ஹிட்டாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை இது ஒரு தமிழ் கலாச்சாரத்தைப் பற்றிய படம் போர், காதல், பாசம் போன்ற மையக்கரு உள்ளது. ஆதித்த கரிகாலன் உடைய காதல் எனக்குள் நெருப்பாக இருந்து கொண்டிருக்கிறது.அவனுடைய காதலுக்காக அவன் என்ன வேணாலும் செய்வான் அதை உணர்ந்து நான் நடித்தேன் சிறந்த காதல் காவியமாக அமையும் என நினைக்கிறேன்.







