சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வரும் 18ம் தேதி மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இதில், ஹீரோயினாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். இது சூர்யாவுக்கு 40வது படமாகும். இந்த படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி டீசர் வரும் 18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதை சமுக வலைதளங்களில் சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.







