முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு இடைத் தேர்தல் அதிமுகவிற்கு திருப்பு முனையாக அமையும் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

 

திண்டுக்கல் இடைத் தேர்தல் திருப்பு முனை அமைந்தது போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடை த் தேர்தல் அதிமுகவிற்கு திருப்பு முனையாக அமையும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மற்றும் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனி பஸ் ஸ்டாப் அருகில்
மாபெரும் பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன்,
அன்புராஜ்,தலைமையில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத்
தலைவர் பழனிசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், முன்னிலையில்
பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்போது பொதுக்கூட்டத்துக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்பொழுது முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு
பேசுகையில்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று அதிமுக வெற்றி பெரும். ஒரு வேளை இரட்டை இலை சின்னம் கிடைக்க பெற தாமதமானாலும் அதிமுக தான் வெற்றி பெறும். அதிமுகவில் பிரச்சினை உருவாகும் போது எல்லாம் இடைத் தேர்தல் திருப்பு முனையாக அமையும் என கூறினார்.

மேலும், திண்டுக்கல் இடைத் தேர்தல் திருப்பு முனை போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் திருப்பு முனையாக அமையும். தமிழகத்தில் தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறிவருகிறார்கள் ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான். இடைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு அதிமுக எந்த அணியும் இருக்காது எல்லாம் ஓர் அணி தான் என கூறினார்.


அத்துடன், 1000 எதிரிகளை கூட சமாளித்து விடலாம் ஆனால் ஒரு துரோகியை சமாளிப்பது தர்ம சங்கடம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பம்பரம் போல் சுற்றி பிரச்சாரம்
மேற்கொண்டவர் எடப்பாடியார். அதனால் தான் 75 தொகுதியை கைப்பற்ற முடிந்தது. 2021 க்கு பிறகு எடுத்த ஒற்றை தலைமை நிலைபாட்டை ஓராண்டுக்கு முன்னரே எடுத்து
இருந்தால் நாம் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருப்போம் என கூறினார்.

மேலும், தை அமாவாசை என்று நன் நாள் பார்த்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 அமைச்சர்கள் இன்று பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். அமாவாசை செண்டிமெட் எல்லாம் திமுகவிற்கு செட் ஆகாது.  திமுகவிற்கு இனிமேல் நாள் தோறும் அமாவாசை தான் வெளிச்சமே கிடையாது என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிதி ஆயோக் கூட்டம்- மத்திய வரியில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரிக்க முதலமைச்சர்கள் வலியுறுத்தல்

Web Editor

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அஞ்சலி!

Arivazhagan Chinnasamy

21 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை

EZHILARASAN D