முக்கியச் செய்திகள் தமிழகம்

சுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை, மக்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன் -ஆளுநர் தமிழிசை

சுயநலத்திற்காக தான் எதையும் செய்வதில்லை, மக்கள் நலனுக்காகத்தான்
செயல்படுகிறேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் பட்டைய கணக்கியல் மாணவர்களின் இரண்டு நாள் மெகா மாநாடு நிறைவு இன்று நடைபெற்றது. அதன் விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர், பட்டயக் கணக்காளர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கு வைக்கிறார்கள். அந்த வகையில் இந்த மாநாடு இன்றைய சூழ்நிலையில் அவசியமான ஒன்று என்றும், வரி செலுத்தவில்லை என்றால் நாடு
முன்னேறாது என தெரிவித்தார்.

மேலும், கணக்காளர்கள் அரசுக்கும் மக்களுக்கும் கணக்கு வழக்கில் ஒரு பாலமாக
செயல்படுகிறார்கள். கணக்காளர்கள் இல்லை என்றால் இன்று எதுவும் செய்ய முடியாது
என்ற சூழ்நிலை உருவாகிறது எனவும் கணக்காளர்கள் நமது வாடிக்கையாளர்களுக்கும்
உண்மையாக இருக்க வேண்டும். அதே சமயம் நாற்றுப்பற்றுடன் செயல்பட வேண்டும். அதை சமமாக அணுக வேண்டும் என்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர்,
தன் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சிலர் கூறி வருகிறார்கள் என்றும், புதுச்சேரியில் ரேஷன் கடை பிரச்சினை நெடு நாளாக உள்ளது.  முந்தைய ஆட்சியில் மூடப்பட்டது, இதற்கு என்று குழு அமைத்து எந்தந்த வகையில் சரி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும் என இது தொடர்பான உண்மைகளை சொன்னால் என் மீது தவறு கூறுவதில் அர்த்தம் இல்லை. சுயநலத்திர்காக தான் எதையும் செய்வதில்லை, மக்கள் நலனுக்காகத்தான் தான் செயல்படுகிறேன். நான் உண்மையாக பணியாற்றி வருகிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜி20 மாநாடு வரும் 30 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற
உள்ளது இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எல்லோரும் பெருமைடையவே
இந்த மாநாடு நடைபெருகிறது. பல மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து
புதுச்சேரிக்கு வருகிறார்கள் இதில் பங்கேற்க உள்ள அவர்கள் நமது உணவு,
கலாச்சாரத்தை தெரியப்படுத்த உள்ளோம் இது நம் பெருமையை பறைசாற்றும் விதமாக
அமையும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டாஸ்மாக் நாளை இயங்காது.

EZHILARASAN D

ஒரு மாதத்தில் 2 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உறுதி

Web Editor

காலாண்டு தேர்வில் புதிய மாற்றங்கள்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

G SaravanaKumar