முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: EVM மிஷின்கள் சரிபார்க்க மாதிரி வாக்கு பதிவு..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கும் பணி இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உண்ணி முன்னிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் மாதிரி வாக்குகளை பதிவு செய்து இயந்திரங்களை பரிசோதித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஏற்கனவே பெல் நிறுவனத்தில் இருந்து 8 பொறியாளர்கள் வந்து வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் , பழுதை சரிபார்க்கும் பணியை தொடங்கினர். இந்த பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. இதில் 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பணி நிறைவடைந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக இருந்ததை அடுத்து ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பெறப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் இன்று காலை மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு சீல் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக செயல்படுகிறதா, பழுது உள்ளதா என்பதை சரிபார்க்கும் பணி தொடங்கியது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இத் தொகுதியில் 52 இடங்களில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 விவி பேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ரேண்டம் முறையில் 25 இயந்திரங்களில் மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கும் பணி நடைபெற்றது. குலுக்கல் முறையில் 5 சதவீத மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் மாதிரி ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டன. அரசியல் கட்சியினர் வாக்குகளை பதிவு செய்து முறையாக அவை பதிவாகிறதா என்று சரி பார்த்தனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், டி ஆர் ஓ சந்தோஷினி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திரௌபதி முர்முவுக்கு அதிமுக ஆதரவு- ஓபிஎஸ்

Web Editor

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 237 ரன்களை குவித்தது இந்திய அணி

G SaravanaKumar

அதிமுகவின் பொன்விழா ஆண்டு; ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

G SaravanaKumar