ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை சந்தித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு வென்ற ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஜனவரி 31ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2019ம் நாடாளுமன்ற தேர்தல்தான் மக்கள் நீதி மய்யம் சந்தித்த முதல் தேர்தல். அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 3.78 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 2.62 ஆக குறைந்தது.
மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்ற தொகுதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதியும் ஒன்று. அந்த தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 4வது இடத்தை பிடித்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார், 10 ஆயிரத்து 5 வாக்குகளை பெற்றார்.
மநீம தனித்துப்போட்டியிடுமா அல்லது பிறக் கட்சிக்கு ஆதரவு அளிக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டனியை கமல் ஹாசன் நிச்சயமாக ஆதரிப்பார் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது “ கமல்ஹாசன் இந்த சந்திப்பில் எங்களுக்கு கை கொடுத்தது மட்டுமல்லாமல் காங்கிரசு கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கும் சேகரிப்பார் என்று நாங்கள் எதிர்பாக்கிறோம். கமல்ஹாசனின் இரத்தத்தில் தேசியமும் காங்கிரசு கலந்த ஒன்று. அவரது தந்தையார் காங்கிரசு கட்சியிலேயே தியாகியாக இருந்தவர். காமராஜரோடு அவரது தந்தையாருக்கு நெருங்கிய நட்பு உண்டு. காங்கிரசு கட்சியையும் கமல்ஹாசனையும் பிரிக்கவே முடியாது.” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவிததார்
ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பை குறித்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது..
“ காங்கிரசு கட்சியிலிருந்து ஆதரவு கேட்டு என்னை சந்தித்தனர். நிர்வாகிகளோடு பேசி ஆதரவு குறித்து விரைவில் அறிவிப்போம்” என கமல்ஹாசன் தெரிவித்தார்.