ஈரோடு இடைத் தேர்தல்; இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது-டிடிவி தினகரன்

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பிரிந்து கிடப்பதால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே பாகனேரியில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல்  குறித்து அமமுக பொதுச் செயளாலர்…

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பிரிந்து கிடப்பதால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அருகே பாகனேரியில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல்  குறித்து அமமுக பொதுச் செயளாலர் டிடிவி.தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்..அப்போது அவர் கூறியதாவது..

”ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பிரிந்து கிடப்பதால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இடை தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் கூட்டனி வைக்கமாட்டோம்.” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாத நிலையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளருமான சண்முகவேல் தலைமையில் ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு மற்றும் பெரியார் நகர் பகுதியில் அமமுக கட்சியினர் கையில் குக்கர் சின்னத்துடன் வீதி வீதியாக சென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவிக்கும் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேல் தெரிவித்திருப்பதாவது..

“டிடிவி தினகரன் வரும் 27ஆம் தேதி அன்று கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று அறிவிக்க உள்ளார். சென்னையில் பேசிய டிடிவி தினகரன் தேவைப்பட்டால் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளாட்சித் தேர்தல், நகராட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என அனைத்திலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தல் பணிகள் செய்து வருகிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அதிமுகவை மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறி இருக்கிறார். அம்மாவின் ஆட்சியை கொண்டு வரும் வரை அயராது பாடுபடுவோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும்.” என்று அமமுக வின்  துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேல் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.