முக்கியச் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை ஹாக்கி; அர்ஜென்டினாவை வீழ்த்தி கொரியா காலிறுதிக்கு முன்னேற்றம்

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் கொரியா அர்ஜென்டினா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

 

15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன. ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் கொரியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தனர்.

ஆட்டத்தின் முதல் பாதில் அர்ஜெண்டினா 1 கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது, 3வது, 4வது பாதி ஆட்டடத்தில் அர்ஜெண்டினா 2 கோல், 1 கோல், 1 கோலும், கொரியா அணி 2 கோல், 1 கோல், 2 கோலும் அடித்தன. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 5 கோல்கள் அடித்ததால் ஆட்டம் 5-5 என்ற கணக்கில் டிரா ஆனது.

இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் கொரியா அணி 3-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி கால் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சர்வதேச சுற்றுலாவில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

Mohan Dass

கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது- மகாராஷ்டிரா அமைச்சர்

G SaravanaKumar

இளையராஜாவுக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஜே.பி.நட்டா கண்டனம்

Arivazhagan Chinnasamy