சென்னையில் அமெ. 247வது சுதந்திர தின விழா – தூதர் எரிக் கார்செட்டி பங்கேற்பு!

சென்னையில் நடைபெற்ற அமெரிக்காவின் 247வது சுதந்திர தின விழாவில்  இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, அமெரிக்கா-இந்தியா இடையேயான வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவுகளைப் பாராட்டினார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்ற பிறகு…

சென்னையில் நடைபெற்ற அமெரிக்காவின் 247வது சுதந்திர தின விழாவில்  இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, அமெரிக்கா-இந்தியா இடையேயான வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவுகளைப் பாராட்டினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்னைக்கு வருகை தந்துள்ள தூதர் எரிக் கார்செட்டி, நேற்று சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட‌ அமெரிக்காவின் 247வது சுதந்திர தின நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். ஜூலை 4, 1776 அன்று சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதை இந்நாள் குறிக்கிறது.

இந்நிகழ்ச்சி இந்தோ-பசிபிக், பாலின சமத்துவம், புத்தாக்கம், விண்வெளி மற்றும் பருவ‌நிலை மாற்றம் உள்ளிட்ட அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான ஒத்துழைப்புக்கான துறைகளை பறைசாற்றும் வகையிலும், அமெரிக்க-இந்திய மக்களுக்கிடையேயான நல்லுறவு மற்றும் தொழில்துறை கூட்டு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்தது.

நிகழ்ச்சியில் பேசிய தூதர் கார்செட்டி, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும், குறிப்பாக தென்னிந்தியாவுக்கு இடையேயான‌ வலுவான மற்றும் வளர்ந்து வரும் கூட்டாண்மையை பாராட்டினார். இது குறித்து அவர் கூறியதாவது:

“அமெரிக்கா, இந்தியா இடையிலான ஆழமான உறவுகள் பல்வேறு முக்கிய துறைகளில் வலுவடைந்து வருகின்றன. இந்த‌ கூட்டாண்மையில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி விரைவில் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்கப் பயணம், நமது இரு நாடுகளுக்கும் இடையே வேகமாக வளர்ந்து வரும் ஒத்துழைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமெரிக்க-இந்திய கூட்டாண்மை எங்களின் மிக முக்கியமான உறவுகளில் ஒன்றாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நமது பகிரப்பட்ட இலக்குகளில் இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். அமைதி, வளம், புவிசார் மற்றும் நமது மக்கள் தொடர்பான முக்கிய‌ விஷயங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பாக‌ தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த‌ அமைச்சர் ராஜா கூற%

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.