127 மணி நேரம் தொடர்ந்து நடனம்: மஹாராஷ்டிரா மாணவி உலக சாதனை!

மஹாராஷ்டிராவை சேர்ந்த மாணவி தொடர்ந்து  127 மணிநேரம் ( 5 நாட்கள்) நடனமாடி உலக சாதனை படைத்துள்ளார்.  மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்  ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தாப். 16  வயது மாணவியான இவர் சிறுவயதில் இருந்தே நடனம்…

மஹாராஷ்டிராவை சேர்ந்த மாணவி தொடர்ந்து  127 மணிநேரம் ( 5 நாட்கள்) நடனமாடி உலக சாதனை படைத்துள்ளார். 
மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்  ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தாப். 16  வயது மாணவியான இவர் சிறுவயதில் இருந்தே நடனம் ஆடுவதில் ஆர்வம் கொண்டவர்.  நடனத்தில் புதிய சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த மே 29ஆம் தேதி காலை அவரது நடன சாதனை நிகழ்ச்சி தொடங்கியது. ரசிகர்கள் கரவொலியுடன் நடனமாட தொடங்கிய அவர், தொடர்ந்து நடனமாடினார்.
ஒன்று, இரண்டு, மூன்று என நாட்கள் கடந்து கொண்டே சென்றாலும் அவரின்  நடனம் தொடர்ந்து ஒரு வழியாக 5ஆவது நாள்  சுமார் 127 மணி நேரம் ஆடிய பிறகு நிறுத்தினார். இதன் மூலம் அவர் உலக சாதனையை முறியடித்துள்ளார்.  அவரது இந்த சாதனை (GWR) வலைப்பதிவில் பகிரப்பட்டுள்ளது.
நான்கு மணிநேரம்  தியானம், ஆறு மணிநேர நடனப் பயிற்சி, மூன்று மணிநேரம் உடற்பயிற்சி. இரவு 10 மணிக்கு உறங்க சென்று அதிகாலை 3 மணிக்கு எழுவேன்.  ஐந்து மணி நேரம் மட்டுமே தூக்கம் என ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தாப் தெரிவித்துள்ளார். நடனத்தின் மூலம் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தனது கனவு என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு மணிநேரத்திற்கு 5 நிமிடம் ஒய்வு, மற்றும் நள்ளிரவில் கிடைக்கும் ஓய்வில் பெறோருடன் தொலைபேசியில் பேச அவர் பயன்படுத்திக் கொண்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.