நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாமகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை, சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்கள், வழக்கறிஞர்கள், இளைஞர்கள் மற்றும் 50 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், அனைத்து சமுதாயத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஜி.கே.மணி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வடமாவட்டங்கள் மட்டுமின்றி தென்மாவட்டங்களிலும் பாமக நம்பிக்கை தரும் கட்சியாக உருவாகி வருவதாகவும் ஜி.கே.மணி குறிப்பிட்டார்.
https://twitter.com/PmkGkm/status/1487721694856765440
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







