”வெற்றியை தடுத்த எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்துவிட்டது”- இபிஎஸ் ஆவேசம்

அதிமுவின் வீழ்ச்சிக்கு சூழ்ச்சி செய்த எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்துவிட்டதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார், பல்வேறு திருப்பங்களைக் கடந்து ஜூலை 11ந்தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால…

அதிமுவின் வீழ்ச்சிக்கு சூழ்ச்சி செய்த எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்துவிட்டதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்,

பல்வேறு திருப்பங்களைக் கடந்து ஜூலை 11ந்தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்விற்கு பிறகு முதல் பொது நிகழ்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் மரச்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் இல்ல காதணி விழாவில்  கலந்துகொண்டார்.

முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்பி.உதயகுமார் திண்டுக்கல் சீனிவாசன், எம்சி சம்பத்,  விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தான் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்கிற இருபெரும் தலைவர்களும் பல்வேறு இன்னல்களை கடந்து வெற்றி அடைந்து அதிமுகவை தொண்டர்களிடம் கொடுத்திருப்பதாக அவர் கூறினார். பல்வேறு சோதனைகளை கடந்து அதிமுகவின் பயணம் தொடர்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.


அதிமுகவில் எட்டப்பராக இருந்தவர்கள் முகத்திரை தற்பொழுது கிழிக்கபட்டு
விட்டது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அவர்கள் இதுநாள் வரை தங்களுடன் இருந்து கட்சியை வலுவிழக்கச் செய்ததாகக் குற்றம்சாட்டினார்.  2021 ல் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று கூறிய அவர்,  ஆனால் அந்த வெற்றியை தங்களோடு இருந்தவர்களே எட்டபர் சூழ்ச்சி செய்து தடுத்துவிட்டதாக குறிப்பிட்டார். அந்த உண்மை தற்போது அம்பலமாகிவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்  அப்போது வெற்றியை தடுத்தவர்கள் தற்போது அதிமுகவை அழிக்க பார்ப்பதாகவும் தனது ஆதங்கத்தை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தினார்.
யாராலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அதிமுக
தொண்டர்கள் உழைத்து உருவாக்கிய கட்சி  என்றும் அவர் கூறினார்.
அதிமுகவில் இருந்த எட்டப்பர்களை வைத்து அக்கட்சியை  அழிக்க  திமுக நினைத்தால் அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.