தமிழ்நாட்டில் மேலும் 2,269 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் நேரத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே சற்று ஆறுதலை அளித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மேலும் 2,269 பேருக்கு புதிய பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35,8526 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,697- ஆக உள்ளது. இதனால், இதுவரை 34,52,216 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. சென்னையில் மட்டும் 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








