எடப்பாடி பழனிசாமியால் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள
கே.எஸ். தென்னரசு யார் என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.
கருப்பண்ண கவுண்டர் மற்றும் செல்லம்மாள் தம்பதியரின் மகனான கே.எஸ்.தென்னரசிற்கு மனைவி , ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் ஐந்தாவது வரை கல்வி பயின்றுள்ளார்.
-1973 முதல் 1980 வரை ஈரோடு நகர அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
-1987 இல் எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்து நேரத்தில் ஜெயலலிதா அணியில் (சேவல்) ஈரோடு நகர கழக செயலாளரா இருந்தார்.
-1989 முதல் 2000 வரை ஈரோடு நகர கழக செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
-2001 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
-2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
– 2016 ல் முதல் இன்று வரை ஈரோடு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

அதிமுக நடத்திய 150 க்கும் மேற்ப்பட்ட போராட்டங்களில் பங்கெடுத்து 8க்கும் மேற்ப்பட்ட முறை சிறை சென்றுள்ளார் கே.எஸ்.தென்னரசு.
இதனடிப்படையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரான கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஈரோட்டில் ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்படலாம் என நியூஸ் 7 தமிழ் ஜனவரி 26ம் தேதியே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
– யாழன்







