முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ், ஜெயலலிதாவின் தொண்டர் இல்லையென்பதை உறுதிப்படுத்தி வருகிறார் -டிடிவி.தினகரன்

எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை உறுதிப்படுத்தி வருவதாக  டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்வதற்காக வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி வி.தினகரன் செய்திகளுக்கு
பேட்டியளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர், பாராளுமன்ற தேர்தலில் வருங்கால பிரதமரை தேர்ந்தெடுப்பதில்
எங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும், அதில் நாங்கள் சிறு அணிலாக செயல்பட்டு
வருகிறோம். தேசிய கட்சி ஒன்றுடன் அமமுக கூட்டணி அமைக்க இருப்பதாகவும்
தெரிவித்தார்.


எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை உறுதிப்படுத்தி
வருகிறார். அவரோடு ஒன்றிணைந்து செயல்பட மாட்டோம் என பலமுறை சொல்லிவிட்டோம் என்றார்.

மேலும், ஜெயலலிதாவை நேசிக்கிறவர்கள் ஒன்றிணைந்து, இதர கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தால் தான் தீய சக்தியான திமுகவை வீழ்த்த முடியும்.  எடப்பாடி
பழனிச்சாமியின் 4 ஆண்டுகால திருவிளையாடலை பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். இதன் விளைவு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிவருவது சந்தில் சிந்து பாடுவது போல் உள்ளது.
இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். ஆளுநர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வரும் நிலையில் இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கவில்லை: முதலமைச்சர்

G SaravanaKumar

10% இடஒதுக்கீட்டை நிராகரிக்கிறோம்; அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

EZHILARASAN D

தூத்துக்குடி : இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

Dinesh A