குரங்கம்மை நோய் பரவல்; கேரள எல்லைகளில் தீவிர சோதனை- அமைச்சர்

கேரளாவில் குரங்கம்மை நோய் பரவலையடுத்து தமிழ்நாடு-கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. பூஸ்டா் தடுப்பூசி…

கேரளாவில் குரங்கம்மை நோய் பரவலையடுத்து தமிழ்நாடு-கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. பூஸ்டா் தடுப்பூசி இலவசமாக வழங்கும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிர படுத்த பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

32-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. முதல் தவணை இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்ட வருகிறது. 31 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு முதல் தடுப்பூசி போட வேண்டி உள்ளது. ba4, ba5 வைரஸால் ஒவ்வொரு 24 மணி நேரமும் 10 பேர் இறந்து வருகிறார்கள்.

எனவே மக்கள் தாமதபடுத்தாமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். தமிழகத்தில் 95.37 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 87.63 சதவீதம் பேர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழகத்தில் சுமாா் 3.5 கோடி பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

குரங்கம்மை நோய் 63 நாடுகளில் பரவியுள்ளது. எனவே விமான நிலையங்களில் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளோம். மேலும் கேரளாவில் 3 பேருக்கு, டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே கேரளாவில் இருந்து வருபவர்களை சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சோதனை கேரளா- தமிழ்நாடு எல்லையான 13 இடங்களில் தீவிரமாக உள்ளது.

செஸ் போட்டிக்காக 187 நாடுகளில் இருந்து வரும் வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்படும். செஸ் போட்டிக்காக 187 நாடுகளில் இருந்து வரும் வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.