முக்கியச் செய்திகள் தமிழகம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பும், அரசியல் கட்சிகளின் அறிவிப்புகளும்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட்ட அறிக்கைகளை ஆய்வு செய்து “சுற்றுச்சுழல் தேர்தல் அறிக்கை 2021” என்ற அறிக்கையை தயார் செய்து அனைத்து கட்சிகளுக்கும் பூவுலகின் நண்பர்கள் குழு வழங்கியிருந்தது.

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழகத்தின் தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்சனைகளின் நிலைபாட்டை தெரிவிப்பத்தோடு, அவற்றை பாதிக்காமல், நீண்ட நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். நான்கு கூட்டணிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சிகளின் அறிக்கையில் சற்றுச்சூழல் சார்ந்து வெளியிடப்பட்ட சில அறிக்கைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எதிரான அறிக்கையாகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சுற்றுச்சூழல் சார்ந்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில் சில திட்டங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் சில திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகும். அவற்றுள் மிக முக்கியமாக கருதப்படுவது, “தமிழகத்தின் அனைத்து ஆறுகளும் இணைக்கப்பட்டு 5 லட்சம் ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கள் பாசன வசதி பெற வழிவகைச் செய்யப்படும்” என்பது சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு அறிவிப்பாகும். இதனையடித்து, நதிநீர் இணைப்பு திட்டம். நதிகளை இணைத்தால் ஏற்படும் பல்லுயிர் பாதிப்புகள் குறித்துப் பல்வேறு அறிவியல் பூர்வ ஆய்வுகள் வந்துவிட்ட நிலையில் தொடர்ந்து எவ்வித தரவுகளும் ஆய்வுகளும் இல்லாமல் வெள்ளநீரை உபரிநீராகக் கருதி நதிகளை இணைப்பது பெரியளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சுற்றுச்சூழல் சார்ந்து திமுக வெளியிட்ட அறிக்கையில், சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. சூழலியல் பார்வையில் இத்திட்டம் எதிர்க்க பட வேண்டியதாகும். இத்திட்டத்திற்கு தேவையான கட்டுமானத்தில் பல இலட்ச்சக்ககான கடல் வாழ் உயிரினங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சுற்றுச்சூழல் சார்ந்து அமமுக வெளியிட்ட அறிக்கையில், கூடங்குளம் அணுவுலை திட்டம், தூத்துக்குடி ஸ்டர்லைட், கதிராமங்கலம் மீத்தேன் திட்டம், உயர் மின் கோபுரம் அமைத்தல், கெயில் குழாய் பதித்தல் போன்ற திட்டங்களுக்கு எதிராக மக்கள் நல போராட்டங்களில் பங்கேற்றவர்களின் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் எனக் கூறப்பட்டிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டம் மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் இணையம் பெட்டக துறைமுகத் திட்டத்தை வரவிடமாட்டோம் என்று அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு ஆதரவு அளித்து கன்னியாகுமரி துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியாகது.

சுற்றுச்சூழல் சார்ந்து மநீம வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புற சுயச்சார்பு குறித்த பகுதியில் ஊரணிகள், குளங்கள், ஏரிகளைப் பாதுகாக்க சுவர்கள் நடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் மனிதர்களைத் தவிர்த்த பிற உயிரினங்களுக்கு எதிரானது ஏரிகளும், குளங்களும், ஊரணிகளும் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. கால்நடைகள், பறவைகள் எனப் பல உயிரினங்களுக்கும் அவை சொந்தம். சுவர் எழுப்புவது சரியான தீர்வாகாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூகுள் டூடுல்ஸ் கௌரவித்துள்ள வேரா இக்னாடிவ்னா யார்?

எல்.ரேணுகாதேவி

உரம் விலையை குறைக்கக்கோரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!

Gayathri Venkatesan

ஹெலிகாப்டர் விபத்து எனப் பரவிய தகவல்; மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Arivazhagan Chinnasamy