பாலியல் வன்கொடுமை தடுக்க முடியாவிடும்போது அதை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியிருப்பது பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநில சட்டமன்ற கூட்டத்தில் வேளாண் பயிர்கள் பாதிப்பு மற்றும் இழப்பீடு குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இதில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர் விமர்சனங்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.
இது குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான ரமேஷ்குமார், “பாலியல் வன்கொடுமையை எதிர்க்கொள்ளும்போது அதை தடுக்க இயலாவிட்டால் அதை சுகமாக அனுபவிக்க வேண்டும் என்கிற பழமொழி ஒன்று உள்ளது. இதே நிலையில்தான் நான் இருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கக்கூடிய நிலையில், சட்டமன்றத்தின் சபாநாயகர் சிரித்துக்கொண்டே, “உங்கள் அனுபவத்தை வரவேற்கிறேன்”. என்று கூறியுள்ளார்.
https://twitter.com/ANI/status/1471662133137985539
காங்கிரஸ் எம்.எல்.ஏவின் பேச்சும், பாஜக சபாநயகரின் வரவேற்பும் பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் கிளப்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ரமேஷ்குமார் மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கர்நாடாக மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2019 முதல் 2021 மே மாதம் வரை 1,168 பாலியல் வன்கொடுமை வழங்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.







