சமூக நீதியின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களால், பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன் மாதிரியாக திகழ்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில், அன்னை தெரசா பல்கலைகழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய ஆளுநர் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமூக நீதியின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களால் தமிழ்நாட்டில், ஆண்களை விட அதிகமாக பெண்கள் கல்வி கற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் பிற மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டில், உயர்கல்விக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்வதும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
இவ்விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திருப்பதி பத்மாவதி பல்கலைகழக துணை வேந்தர் ஜமுனா துவ்வுரு ஆகியோர் கலந்துகொண்டனர்.
Advertisement: