முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

சுற்றி வளைத்த ஆஸி- அசால்ட் செய்த இங்கிலாந்து

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 5ஆம் தேதி சிட்னியில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலியா அணி 416 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் 122 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் 265 ரன்களுக்கு ஆட்டத்தை டிக்ளர் செய்தது. இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தியிருந்தார் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா.

இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 388ரன்களை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி. நேற்று 4வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது. 5வது மற்றும் கடைசி நாளான இன்று ஆட்டம் தொடங்கிய முதலே விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. கிராவ்லி – ஜோ ரூட் சற்று நிதானமாக ஆடி வந்த நிலையில் 77 ரன்களில் ஆட்டம் இழந்தார் கிராவ்லி. ஜோ ரூட் 24 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 60 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தோல்வியின் விளிம்புக்கு சென்ற இங்கிலாந்து அணியின் 9வது விக்கெட்டுக்கு ஜேக் லீச் உடன் ஸ்ரூவர் பிராட் ஜோடி சேர்ந்தார்.

வியூகம் வகுத்த ஆஸி.

இங்கிலாந்து அணியை ஒயிட் வாஸ் செய்து விட வேண்டும் என எண்ணிய ஆஸ்திரேலியா அனைத்து வீரர்களையும் மைதானத்தின் ‘கல்லீ’, ‘மிட் ஆப்’, ‘கவர்’, ‘லெக் ஸ்லிப்’, ‘ஷாட் லெக்’ என வளையத்திற்குள் நிறுத்தியது. தாக்கு பிடித்து ஆடிய இங்கிலாந்து அணி வீரர் ஜேக் லிச் 26 ரன்களில் ஸ்மித் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 12 பந்துகளை சமாளிக்க வேண்டும் என்ற நிலையில் பிராட் – ஆண்டர்சன் ஆகியோர் சாமர்த்தியமாக  ஆடி அணியை காப்பாற்றினர்.  இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இணையத்தில் வைரல்

ஆஸ்திரேலியா அணி நீண்ட காலத்திற்கு பிறகு அனைத்து பீல்டர்களையும் வளையத்திற்குள் நிறுத்தியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

– மா.நிருபன்

Advertisement:
SHARE

Related posts

பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Jeba Arul Robinson

விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்திய பெண் ஷிரிஷா பண்டாலா

இறந்து போன தாய் அருகே இரண்டு நாட்களாகப் பட்டினி கிடந்த 18 மாதக் குழந்தை!

Ezhilarasan