நாளை உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து அறிக்கையில், இனிமை சூழ்ந்து – இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதி பூண்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி#HappyNewYear2022 pic.twitter.com/YRxSdiWfqD
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 31, 2021
நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும்.
‘ யாதும் ஊரே , யாவரும் கேளிர் ‘ எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய நமது தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் செழித்திடவும், உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன்.
நமது அரசுக்கு உறுதுணையாக விளங்கிடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.