முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி-20 உலகக் கோப்பை: முதல் அரையிறுதியில் இங்கி- நியூசி. அணிகள் இன்று மோதல்

டி-20 உலகக் கோப்பைத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. ‘சூப்பர்-12’ சுற்று முடிவில் ‘குரூப்-1’-ல் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ‘குரூப்-2’-ல் முதல் இரு இடங்களை பிடித்த பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அபுதாபியில் இன்று இரவு நடக்கும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்து அணி லீக் ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இலங்கை அணிகளை வெற்றிகொண்டு, தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி வருகிறார். மற்றொரு அதிரடி வீரரான ஜேசன் ராய் காயம் காரணமாக விலகி இருப்பதால் ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். டேவிட் மலான், லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ ஆகியோர் சிறந்த ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ஜோர்டான், அடில் ரஷித், மொயின் அலி ஆகியோர் மிரட்டுகிறார்கள் என்பதால் அந்த அணி அதிக தெம்புடன் இருக்கிறது.

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடன் தோற்ற நியூசிலாந்து அணி,, இந்தியா, ஸ்காட்லாந்து, நமிபியா, ஆப்கானிஸ்தான் அணிகளை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணியில்  கப்தில், கேன் வில்லியம்சன், மிட்செல், கான்வே ஆகியோர் சிறப்பாக ஆடி வருகிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் போல்ட்ட், டிம் சவுதி, சோதி, சான்ட்னர் மிரட்டுகிறார்கள் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும்.

2019-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முடிவில், பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அதற்கு நியூசிலாந்து அணி இன்று பதிலடி கொடுக்குமா? என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

 

Advertisement:
SHARE

Related posts

தனது பிடியிலிருந்து பாதுகாப்புப் படை வீரரை விடுவித்தது மாவோயிஸ்ட் அமைப்பு!

Halley karthi

அம்மா உணவகங்களில் சப்பாத்தி பற்றாக்குறை; மாநகராட்சி விளக்கம்

Halley karthi

மழை பாதிப்பு; நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை

Halley karthi