பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு..! – எங்கு பார்ப்பது?

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் காலை 10.30 மணிக்கு வெளியாகிறது. தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 2,53,954 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2,09,645 பேர் கட்டணம் செலுத்தி…

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் காலை 10.30 மணிக்கு வெளியாகிறது.

தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 2,53,954 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2,09,645 பேர் கட்டணம் செலுத்தி இருந்த நிலையில், 1,93,853 பேர்‌ சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்திருந்தனர்.

இந்நிலையில் கட்டணம் செலுத்தி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தவர்களுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியாக இருக்கிறது. இதனை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார்.

இன்று காலை 10:30 மணிக்கு பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும் நிலையில், இதனை tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த இணையதளத்தில் உங்களுடைய விவரங்களை பதிவு செய்து தரவரிசை பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.