சென்னையில் கே.கே.நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்திற்கு 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் அரவிந்த் என்பவர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய 2 போலிஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







