அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணிப்பறிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, கடந்த 12-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் செந்தில்பாலாஜி மீதான வழக்கை எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் 28-ம் தேதி விசாரணை வரவுள்ளது.







