புதிதாக சொகுசு விமானம் வாங்கும் எலான் மஸ்க்; விலை எவ்வளவு தெரியுமா?

ரூ.643 கோடி மதிப்புள்ள ‘Gulfstream G700’ என்ற அதிநவீன சொகுசு விமானத்தை வாங்கியுள்ளார் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அதில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி…

ரூ.643 கோடி மதிப்புள்ள ‘Gulfstream G700’ என்ற அதிநவீன சொகுசு விமானத்தை வாங்கியுள்ளார் எலான் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அதில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்த அவர், ட்விட்டர் நிறுவன பணியாளர்கள் பலரையும் ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்துள்ளார்.

இந்த நிலையில் எலான் மஸ்க் தனக்காக ஒரு புதிய ஸ்வான்கி பிரைவேட் ஜெட் விமானத்தை வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விலை $78 மில்லியன். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 643 கோடி. இந்த விமானமானது, கடல் மட்டத்தில் இருந்து 51,000 அடி உயரத்தில் பறக்கக்கூடியவை எனவும், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 7,500 கடல் மைல்கள் இடைவிடாமல் பறக்கும் திறன் வாய்ந்தவை எனவும் கூறப்படுகிறது.

இந்த விமானம் எலான் மஸ்கிற்கு அடுத்த ஆண்டு டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விமானத்தில் 19 பேர் பயணிக்க முடியும். G700 ஜெட் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. தான் ஏற்கனவே பயன்படுத்தி வந்த G650ERக்கு பதிலாக இந்த விமானத்தை வாங்குகிறார் எலான் மஸ்க்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.