ட்விட்டரின் எக்ஸ் லோகோவில் மீண்டும் மாற்றம் கொண்டு வந்த எலான் மஸ்க்!

ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிறக் குருவி இருந்த லோகோவை எலான் மஸ்க் சமீபத்தில் மாற்றியிருந்த நிலையில், தற்போது அதிலும் மேலும் சில மாற்றங்களை செய்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான…

ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிறக் குருவி இருந்த லோகோவை எலான் மஸ்க் சமீபத்தில் மாற்றியிருந்த நிலையில், தற்போது அதிலும் மேலும் சில மாற்றங்களை செய்துள்ளார்.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் 1 நாளைக்கு பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் தான் பார்க்க முடியும் என ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். அவரின் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு எழுந்த போதும் அதைப்பற்றி அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

மேலும் புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணம், ட்விட்டரில் விளம்பரம் செய்து பொருளீட்டுதல் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தினார். அந்த மாற்றங்கள் தனித்துவம் அளித்து வணிகரீதியாக கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதனை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 22ஆம் தேதி ட்விட்டருக்கு புதிய லோகோவை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அதுதொடர்பான யோசனைகளை பகிருமாறு ட்விட்டர் யூசர்களை எலான் மஸ்க் கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தின் புகழ் பெற்ற நீல நிற குருவியின் லோகோவை மாற்றி கருப்பு – வெள்ளை நிறத்தில் எக்ஸ் இஸ் லைவ்” என்ற புதிய லோகோவுடன் ட்விட்டர் தலைமையகத்தின் புகைப்படத்தை இணைத்து எலான் மஸ்க் வெளியிட்டார்.

இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இருந்தும் தன் முடிவில் பின் வாங்காத எலான் மஸ்க் தொடர்ந்து இலச்சினைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்போது எக்ஸ் லோகோவில் சில மாற்றங்களை செய்துள்ளார். ஏற்கெனவே உள்ள எக்ஸ் லோகோவை சற்று அடர்த்தியாக்கி இறுதி வடிவம் கொடுத்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.