ஆயிரக்கணக்கானோரை வேலையை விட்டு துரத்தும் எலான் மஸ்க்..!

டெஸ்லா நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கானோரை வேலையை விட்டு எலான் மஸ்க் நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  உலகின் ஒன்றாம் நம்பர் பணக்காரரான எலான் மஸ்க் அதிரடியான முடிவுகளுக்கு பெயர் போனவர். ட்விட்டரில்…

டெஸ்லா நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கானோரை வேலையை விட்டு எலான் மஸ்க் நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உலகின் ஒன்றாம் நம்பர் பணக்காரரான எலான் மஸ்க் அதிரடியான முடிவுகளுக்கு பெயர் போனவர். ட்விட்டரில் யாரோ ஒருவர் விளையாட்டாக ட்விட்டரை எப்போது வாங்குவீர்கள் என கேட்க அதன் விலை எவ்வளவு எனக்கூறி ட்விட்டரின் பெரும் பங்கினை வாங்கிப்போட்டவர் எலான் மஸ்க். அருணாச்சலம் படத்தில் வரும் ரஜினியை போல் பணத்தை வைத்து இஷ்டத்துக்கும் விளையாடுவதே அவரின் பொழுதுபோக்காக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து 10 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக பத்திரிகை ஒன்றின் பேட்டியில் அவர் கூறியிருப்பது பரபரப்பை உருவாக்கியுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் இந்த பணிநீக்கம் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்லாவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எலான் மஸ்க் இ-மெயில் மூலமாக அதன் நிர்வாகிகளுடன் பேசியதாக கடந்த மாதமே தகவல் வெளியாகியிருந்தது. நாட்டின் பொருளாதார சூழல் மோசமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும், உலகம் முழுவதும் இருக்கும் டெஸ்லா நிறுவனத்தில் அடுத்த சில காலங்களுக்கு புதிதாக யாரையும் வேலைக்கு எடுக்கப்போவதில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வீட்டில் இருந்த பணிசெய்வது (work from home) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும், பணியாளர்கள் அனைவரும் நிச்சயம் அலுவலகத்திற்கு வந்தே தீரவேண்டும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். work from home-இல் இருந்தாலும் வாரத்திற்கு 40 மணி நேரம், அதாவது வாரத்தின் 5 நாட்களுக்கு தினம் 8 மணி நேரம் அலுவலகத்தில் இருந்தே தீர வேண்டும் எனவும் அப்படி இல்லையென்றால் தாராளமாக வேலையை விட்டு கிளம்பலாம் எனவும் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த ஆண்டில் வெளியாகியுள்ள தகவல் படி டெஸ்லா நிறுவனத்தில் உலகம் முழுக்க ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பணியாற்றுகிறார்கள். கடந்த சில நாட்களாகவே இதில் பணிபுரியும் பலரும் தாங்கள் டெஸ்லாவிலிருந்து விலகுவதாகவும், வேறு நிறுவனங்களில் பணி தேடுவதாகவும் linked in-இல் பகிந்தவண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் கையில் எடுத்திருக்கும் ‘பணி நீக்கம் ‘ எனப்படும் இந்த பர்னீச்சரால் எத்தனை பணியாளர்கள் பாதிக்கப்படப்போகிறார்கள் என வரக்கூடிய காலங்களில் தெரிந்துவிடும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.