தமிழ்நாட்டில் மின்சார வாகன உற்பத்தியில், எலான் மஸ்க் முதலீடு செய்ய வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ட்விட்டர் பதிவில், இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த சதவீதத்தில் தமிழ்நாட்டின் பங்கு 34 சதவீதம் என்றும் வருங்காலத்தில் இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலை உருவாகும் என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/TThenarasu/status/1483039382777266177
உலக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் 9-ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது எனக் கூறிய அவர், ஓசூரில் மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலை அமைய இருப்பதையும், திருவள்ளூர் மாவட்டம் மணலூர் பகுதியில் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை வர இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், ஓலா இருசக்கர வாகன மின்சார வாகனம் உற்பத்தி ஆலை செயல்பாட்டுக்கு வந்துள்ளதையும் அமைச்சர் தென்னரசு அந்த டிவிட்டர் பதிவில், கூறிப்பிட்டிருந்தார்.








