எலிமினேட்டர் சுற்று: ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் பிளே ஆப் சுற்று எலிமினேட்டர் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.  கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின்…

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் பிளே ஆப் சுற்று எலிமினேட்டர் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. 

கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17-வது சீசன்,  அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், 70 லீக் போட்டிகளின் முடிவில் 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.  இந்நிலையில், நேற்று (மே 21) முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில்,  13.2 ஓவர்களில் இலக்கை கடந்து,  164 ரன்களை விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் முதல் அணியாக  நுழைந்தது.

இதையடுத்து,  ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,  4-வது இடம் பெற்ற  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதயுள்ளன.  இதில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும்.  வெற்றி பெறும் அணி,  முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஹைதராபாத் அணியுடன் மோதும்.  இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.

இதையும் படியுங்கள் : “நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்” – நடிகர் சூரி குறித்து சிவகார்த்திகேயன் புகழாரம்!

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் 8 வெற்றி,  5 தோல்வி பெற்று 17 புள்ளிகளுடன்  புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் 7 வெற்றி,  7 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.