முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்ரீமதியின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் சொந்த ஊரான பெரிய நெசலூர் வீட்டில் பெற்றோரை நேரில் சந்தித்தார் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி. மாணவி ஸ்ரீமதியின் தாய் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போய்யா மொழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலினிடம் தெரிவித்ததை அடுத்து மாணவியின் தாய் செல்வி முதல்வரிடம் பேசினார்.

கனியாமூர் கலவர வழக்கு- நூதன நிபந்தனையுடன் ஜாமின் வழங்கிய நீதிபதி

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 69 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமினை வழங்கிய விழுப்புரம் மாவட்ட தலைமை முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா 10 மரக்கன்றுகளை நடவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளி
மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
மாணவி மரணம் தொடர்பாக நீதி கேட்டு போராட்டம் நடத்தியபோது போராட்டம் கலவரமாக மாறி தனியார் பள்ளி பேருந்துகள் கட்டிடங்கள் தீ வைத்து எரித்து
சேதப்படுத்தப்பட்டன.

கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 296 பேரின் ஜாமின் மனு மீதான வழக்கு விசாரனை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்பு நீதிமன்றத்தில் விசாரனை 9 அம் தேதி வந்த போது 64 பேருக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் 174 பேரின் ஜாமின் மனு மீதான விசாரனை நிலுவையிலிருந்த நிலையில் மீண்டும் இன்று ஜாமின் மனு மீதான விசாரனை வந்தது. ஜாமின் கோரிய 174 பேரில் 69 பேருக்கு நிபந்தனையுடன் இன்று ஜாமின் நீதிபதி பூர்ணிமா ஜாமின் வழங்கினார். நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 69 பேரும் தனித்தனியாக 10 ஆயிரத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏதேனும் ஒன்றில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்று கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் செலுத்த வேண்டும் எனவும் 69 பேரும் அவரவர் உள்ளூர் முகவரியில் உள்ள பிராந்திய நிலையில் வரக்கூடிய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விடுமுறை நாட்கள் உள்பட மறு உத்தரவு வரும் வரை
தினந்தோறும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் என இரு வேளையும் நேரில்
ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து மறு உத்தரவு வரும் வரை அவரவர் விரும்பும் பள்ளி- கல்லூரிகளில் 10 மரக்கன்றுகளை நட்டு அதனைப் புகைப்படமாக எடுத்து பிராந்திய எல்லையில் வரக்கூடிய குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் சமர்ப்பிக்க
வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்து மாவட்ட நீதிபதி பூர்ணிமா
உத்தரவிட்டுள்ளார்.

மீதமுள்ள 105 பேரின் ஜாமின் பரிசீலனையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதுவரை 133 பேருக்கு ஜாமின் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் செல்லும் நீச்சல் வீராங்கனை!

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Dinesh A

ராமநவமி பண்டிகை; விமரிசையாக நடைபெற்ற நள்ளிரவு வழிபாடுகள்

G SaravanaKumar