தருமபுரி மாரண்டஹள்ளி அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தாய் யானையின் இறந்த இடத்திலிருந்து 6 நாட்களுக்கு பிறகு குட்டி யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி வன சரகத்திற்கு உட்பட்ட காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தண்ணீர் மற்றும் இரை தேடி ஊருக்குள் புகுந்த 2 குட்டிகள் உள்ளிட்ட 5 யானைகளில், மின்வேலியில் சிக்கி 2 பெண் யானைகள், ஒரு மக்னா யானை என மூன்று யானைகள் உயிரிழந்தன.
இந்நிலையில் உயிருடன் இருந்த 2 குட்டி யானைகளையும் பத்திரமாக வேறு யானை கூட்டத்தினோடோ அல்லது முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி 2 யானை குட்டிகளையும் வனத்துறையினர் பத்திராமாக கண்காணித்து வந்தனர்.ஆனால் யானைகுட்டிகள் தாய் இறந்த இடத்தில் சுற்றிக் கொண்டே இருந்தன.
சுமார் ஆறு நாட்களுக்குப் பிறகு தாய் இறந்த இடத்திலிருந்து 5கிலோ மீட்டர் தூரம் நகர்ந்து அத்திமுட்லு சிவன் கோவில் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்தன. மற்ற யானைகளை போல் சாதாரணமான உணவை யானைகுட்டிகள் உட்கொண்டு வந்தாலும் அவற்றை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ள வனத்துறையினர்நீதிமன்றத்தில் இருந்து அடுத்த உத்தரவு வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என தெரிவித்தனர்.
-வேந்தன்








