அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
உலகில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்து வருகிறது. இங்கு அவ்வப்போது தேவாலாயங்கள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்களில் துப்பாக்கிச்சூடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அந்நாட்டில் துப்பாக்கிகள் வைத்திருக்க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற பிராத்தனை கூட்டத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 அம் ஆண்டு இதேபோல் டெக்சாஸில் உள்ள மற்றொரு தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.







