சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து!

சென்னையில் கடற்கரை- தாம்பரம் இடையே காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து…

#TrainCancelled | Attention passengers… Electric train service between Chennai Beach – Tambaram cancelled tomorrow!

சென்னையில் கடற்கரை- தாம்பரம் இடையே காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இதனிடையே, பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதோடு, வழித்தடங்கள் மாற்றப்படுகின்றன. அந்த வகையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டிற்கு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் பணிமனையில் நடைமேம்பால பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பின் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.