முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்சார ரயில் விபத்து; ஓட்டுநரின் கவனக் குறைவே காரணம்

சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில், திடீரென ரயில் தடம் புரண்டதற்கு ஓட்டுநரின் அலட்சியமே முழுகாரணம் என ரயில்வே துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பயணிகள் யாரும் இல்லாத நிலையில் பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில், திடீரென நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்தில் ரயில் என்ஜின் உள்பட 2 பெட்டிகளும், பிளாட்பாரத்தில் இருந்த 2 கடைகளும் சேதமடைந்தன. பயணிகள் இல்லாததால் உயிர் சேதமின்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மின்சார ரயிலை இயக்கிய ஓட்டுநர் மீது எழும்பூர் ரயில்வே போலீஸ் நிலையத்தில், கடற்கரை ரயில் நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 151, 154 மற்றும் 279 ஆகிய 3 பிரிவின் கீழ், ரயில்வே சொத்தை சேதப்படுத்துதல் மற்றும் கவனக்குறைவாக செயல்பட்டதற்காக ஓட்டுநர் பவித்ரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து ரயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரயிலை இயக்கிய போது பிரேக் செயல்படவில்லை என்பதால் விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநர் பவித்ரன் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரேக் செயல்படவில்லை என பவித்ரன் கூறியது தவறானது எனவும், பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை கவனக்குறைவால் அழுத்தியது தான் விபத்திற்கு காரணம் எனவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தபின், ஓட்டுநர் பவித்ரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை வங்கி கொள்ளை; 18 கிலோ தங்கம் மீட்பு

G SaravanaKumar

மகளிர் தினம்: கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Halley Karthik

மதுரையில் வனவிலங்குகளை பாதுகாக்க மேம்பாலம்

G SaravanaKumar