சென்னையில் அரசு கல்லூரி மாணவிகள் நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
வடசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள ஆர்.கே. நகர் அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து கொண்டிருந்தனர்.
அப்போது இரு தரப்பு மாணவிகளுக்கிடையே பேருந்து நிறுத்தத்திலேயே வாய்தகராறு ஏற்பட்டு முடியை பிடித்து இழுத்து சண்டையில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த சக கல்லூரி மாணவ, மாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். கல்லூரி வளாகத்தினுள் ஏற்பட்ட வாய்தகராறு பேருந்து நிறுத்தம் வரை நீடித்து குடுமி சண்டையாக மாறியுள்ளதாக தெரிகிறது.
மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து புதுவண்ணார்ப்பேட்டை போலீசார் அங்கு வந்து சண்டையில் ஈடுபட்ட மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இனிமேல் இதுபோன்று தெருவில் நின்று சண்டைபோடக் கூடாது என்றும், பிரச்னைகளை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.








