21 மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்

மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 21 மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் வார்டு குழு தலைவர் மற்றும் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தலை…

மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 21 மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் வார்டு குழு தலைவர் மற்றும் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 21 மாநகராட்சிகளிலும், மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இதனடிப்படையில், நெல்லை மாநகராட்சியில் உள்ள தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடைபெற்றது. 4 மண்டலங்களிலும் திமுகவைச் சேர்ந்த ரேவதி, மகேஷ்வரி, கதீஜா, பிரான்சிஸ் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். 4 பேருக்கும் மன்றத் தலைவர்களுக்கான சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

இதேபோன்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. 4 மண்டலங்களிலும் திமுகவைச் சேர்ந்த சக்திவேல், அன்பரசன், ராஜா, கனகராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவித்தார். பின்னர் இவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோல, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில் 2 இடங்களிலும் திமுகவும், காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த தலா ஒருவர் என நான்கு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நாகர்கோவில் கிழக்கு மற்றும் வடக்கு மண்டல தலைவராக திமுகவைச் சேர்ந்த அகஸ்டினா கோகிலவாணி, ஜவஹர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் மேற்கு மண்டல தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வகுமாரும், நாகர்கோவில் தெற்கு மண்டல தலைவராக பாஜகவைச் சேர்ந்த முத்துராமனும் போட்டியின்றி தேர்வாகினர். இவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

அண்மைச் செய்தி: ‘தென் மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் நீட் எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டும்’ – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும், விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் உள்ள 4 மண்டல தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுகவைச் சேர்ந்த குருசாமி, அழகுமயில், சேவுகன், சூர்யா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற 4 பேருக்கும் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் வாழ்த்து தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.