‘தென் மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைத்து நீட் எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டும்’

தென் மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். 2015-ஆம் ஆண்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக…

தென் மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

2015-ஆம் ஆண்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது தொடர்பான வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட லுலு நிறுவனத்தில் வட இந்தியர்களே பணிபுரிவார்கள் எனவும், இது பேராபத்தை நோக்கிச் செல்லும் எனவும் கூறினார்.

மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்படும் என கூறிய சீமான், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் துபாய் பயணச் செலவை திமுக ஏன் ஏற்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

அண்மைச் செய்தி: ‘எழுவர் விடுதலை; தமிழ்நாடு அரசு, விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு’

மேலும், தென் மாநில சட்டப்பேரவைகளில் நீட் எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற அம்மாநில முதலமைச்சர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் எனவும், நீட் விலக்கு தொடர்பாக குடியரசுத்தலைவரை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.