கடந்த நான்கு ஆண்டுகளில் ஏராளமான மக்கள் விரோத கொள்கைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தி வருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளும் குடியுரிமையும் பறிக்கப்பட்டு வருகிறது எனவும், கொடுமையான சட்டங்களை இயற்றி மத்திய பாஜக அரசு மக்களை துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசை கண்டித்து 4 முறை பொதுவேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றதை சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையிலும் பாஜக மீண்டும் ஏன் வெற்றி பெறுகிறது என்பதை சிந்திக்க வேண்டும் என கூறினார்.
அண்மைச் செய்தி: ‘21 மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்’
அதேபோல, விலைவாசி உயர்வு, வேலையின்மை குறித்து பாஜக பேசுவதில்லை என குற்றம்சாட்டிய சீதாராம் யெச்சூரி, மதசார்பற்ற தன்மையை தகர்க்கும் நோக்கில் பகவத் கீதையை பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்வதாக தெரிவித்தார். இம்மாநாட்டில், அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







