ஆந்திராவில் மேல்சபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 10ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், பட்டதாரி என்ற பெயரில் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மேல்சபைத் தேர்தல் இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தலை முன்னிட்டு பட்டதாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் இன்று காலை முதல் நீண்ட
வரிசையில் காத்திருந்து வாக்குச் சாவடிகளில் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பதி உட்பட பல்வேறு பட்டதாரி மேல் சபை உறுப்பினர்களுக்கான
தொகுதிகளில் ஏராளமான எண்ணிக்கையில் போலி வாக்காளர்களை ஆளும் கட்சியினர்
வாக்காளர் பட்டியலில் சேர்த்திருப்பதாக எதிர்க்கட்சியினர் ஆதாரங்களுடன் கடந்த
மூன்று நாட்களாக நிரூபித்து வருகின்றனர். வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன் போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையும் படிக்க: இது தொடக்கம் தான்; இந்திய சினிமா எந்த எல்லைக்கும் செல்லும்- ஜூனியர் என்டிஆர்
ஆனால், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை புறம் தள்ளி வாக்கி எண்ணிக்கையை
அதிகாரிகள் இன்று காலை திட்டமிட்டபடி எட்டு மணிக்கு துவக்கினர். இந்த நிலையில் வாக்காளர்கள் இன்று காலை முதல் வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், திருப்பதியில்
உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஜயா என்பவர் வாக்கு
செலுத்த வரிசையில் காத்திருந்தார்.

அங்கு இருந்தவர்கள் நீ எந்த ஊர்? உன்னுடைய கல்வித் தகுதி என்ன என்று கேள்வி
எழுப்பினர். அப்போது அந்த பெண் எங்களுடைய சொந்த ஊர் காட்பாடி. 10 ஆண்டுகளுக்கு
முன் திருப்பதியில் வந்து இங்கு வசித்து வருகிறோம். நான் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்துவிட்டேன். எங்கள் பகுதியில் இருக்கும் வார்டு வாலண்டியர் இந்த காகிதத்தை என்னிடம் கொடுத்து ஓட்டுப் போட சொன்னார். எனவே, நான் ஓட்டு போட வந்தேன் என்று கூறினார். அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து விரட்டி விட்டனர்.
மேலும், இன்று நடப்பது எந்தவிதமான தேர்தல் என்பதற்கும் அந்த பெண்ணால் பதில்
கூற இயலவில்லை. இதனால் உண்மையிலேயே பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி அடைந்து
ஓட்டுப் போட வந்த பட்டதாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், ஆந்திராவில் உள்ள பல்வேறு வாக்கு சாவடிகளிலும் ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் பட்டதாரிகள் என்ற பெயரில் ஏராளமான போலி வாக்காளர்கள் வாக்கு செலுத்த வந்த காரணத்தால் வாக்கு சாவடிகளில் ஆளுங்கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் துணையுடன் ஆளுங்கட்சியினர் மேல் சபை தேர்தலில் கள்ள ஓட்டுகளை போடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளார்.
-ம.பவித்ரா







