7 ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம்!

டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் வெளியான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. 95வது…

டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் வெளியான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த நடிகர், நடிகை, உள்ளிட்ட 23 பிரிவுகளில் பல சர்வதேச திரைப்படங்கள் போட்டியிட்டன. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பரிந்துரைக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதில் பங்கேற்க சென்ன ஆர்ஆர்ஆர் திரைப்பட குழுவினருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) ஆகியோர் இயக்கியிருந்தனர்.

‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளது.

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை இப்படத்திற்காக மிஷெல் யோஹ் (Michelle Yeoh) வென்றார். சிறந்த ஒரிஜினல் திரைக்கதை பிரிவில் ‘எவ்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ ஆஸ்கார் விருதை டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் பெற்றனர். சிறந்த ஒளிப்பதிவிற்காக ஜேம்ஸ் ப்ரண்டும், சிறந்த திரைப்படம், சிறந்த துணைநடிகைக்கான  ஜேமி லீ கர்டிசும், சிறந்த துணை நடிகருக்காக நடிகர் கி ஹுங் குயினும் விருதை பெற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.